டெல்லி – மீரட் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில் 160 கி.மீ வேகத்தில் பயணம்

புதுடெல்லி: டெல்​லியி​லிருந்து மீரட்​டுக்கு 84 கி.மீ தூரத்​துக்கு ரூ.30,274 கோடி செல​வில் ரயில் பாதை அமைக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் 55 கி.மீ தூரத்​துக்கு விரைவு ரயில் பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் நமோ பாரத் ரயில் 160 கி.மீ வேகத்​தில் இயக்​கப்​பட்​டது.

கிழக்கு டெல்​லி​யில் நியூ அசோக் நகரிலிருந்து உத்தர பிரதேசத்​தில் தெற்கு மீரட் இடையே 15 நிமிட இடைவெளி​யில் 30 நமோ பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. ஒவ்​வொன்​றி​லும் 6 பெட்​டிகள் உள்​ளன. இந்த வழித்​தடத்​தில் 11 ரயில் நிலை​யங்​கள் வழி​யாக செல்​லும்​போது மட்​டும் சில விநாடிகளுக்கு நமோ பாரத் ரயில் 160 கி.மீ வேகத்தை எட்​டும்.

இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு கதி​மேன் எக்​ஸ்​பிரஸ் ரயில் ஹஸ்​ரத் நிசா​முதீன் மற்​றும் ஆக்ரா இடையே சிறப்பு ரயில் பாதை​யில் 160 கி.மீ வேகத்​தில் இயக்​கப்​பட்​டது. அதன்​பின்​பு​தான் வந்தே பாரத் ரயிலும் இதே வழித்​தடத்​தில் அதி​கபட்ச வேக​மான 160 கி.மீ வேகத்​தில் இயக்கி பரிசோ​திக்​கப்​பட்​டது. ஆனால் இந்த ரயில்​களின் வேகம் மணிக்கு 160 கி.மீ-லிருந்து 130 கி.மீ-ஆக குறைக்கப்பட்டது.

நமோ பாரத் ரயில்​கள் மட்​டுமே தற்​போது 160 கி.மீ வேகத்​தில் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில் ஹைத​ரா​பாத்​தில் வடிவ​மைக்​கப்​பட்டு குஜ​ராத்​தில் தயாரிக்​கப்​படு​கிறது.

அடுத்​த​தாக டெல்லி சாராய் கலே கானிலிருந்து உத்தர பிரதேசத்​தின் மோதிபுரம் வரை மொத்த தூரம் 82.15 கி.மீ வழித்​தடத்​தில் உள்ள 16 நிலை​யங்​களி​லும் ரயில் போக்​கு​வரத்து விரை​வில் தொடங்கி வைக்​கப்​பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.