​​​​​​​மியான்மரில் 2 பள்ளிகள் மீது தாக்குதல்: மாணவர்கள் 19 பேர் உயிரிழப்பு; ராணுவம் மீது கிளர்ச்சியாளர்கள் புகார்

யாங்கூன்: மியான்​மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகி​யின் அரசு கவிழ்க்​கப்​பட்​டது. பின்​னர் ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டுக்​குள் மியான்​மர் வந்​தது. ஆனால், ராணுவத்தை எதிர்த்து அங்​குள்ள பல ஆயுதமேந்​திய குழுக்​கள் மற்​றும் எதிர்ப்​புப் படைகள் போராடி வரு​கின்​றன.

இந்​நிலை​யில், கடந்த வெள்​ளிக்​கிழமை நள்​ளிரவு ரக்​கைன் மாகாணத்​தில் உள்ள 2 பள்​ளி​கள் மீது 500 பவுண்ட் எடை​யுள்ள குண்​டு​களை மியான்​மர் ராணுவம் வீசி தாக்​குதல் நடத்​தி​ய​தாக ‘அராகன் ஆர்​மி’ கிளர்ச்​சி​யாளர்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர். இந்த தாக்​குதலில் பள்ளி விடு​தி​களில் தங்​கி​யிருந்த மாணவர்​கள் 19 பேர் தூக்கத்​திலேயே உயி​ரிழந்​தனர். மேலும், 22 பேர் படு​கா​யம் அடைந்​தனர். ராணுவத்​தின் வான்​வழித் தாக்​குதலில் 15 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவர்​கள் 19 பேர் இறந்​துள்​ளனர். இதற்கு ஆளும் ராணுவம்​தான் பொறுப்பு என்று கிளர்ச்​சி​யாளர்​கள் கூறி​யுள்​ளனர்.

இந்த தாக்​குதல் குறித்து மியான்​மர் ராணுவம் எந்த பதி​லும் அளிக்​க​வில்​லை. எனினும், ‘மி​யான்​மர் நவ்’ என்ற செய்தி நிறு​வனம், பள்​ளி​கள் மீது 500 பவுண்ட் எடை​யுள்ள குண்​டு​களை வீசி​ய​தாக செய்தி வெளி​யிட்​டுள்​ளது. இந்​தத் தாக்​குதலுக்கு ஐ.நா.​வின் குழந்​தைகள் விவ​கார பிரிவு யுனிசெப் கடும்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.