சென்னை: தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 13ந்தேதி நடைபெற்ற தேசிய லோக்-அதாலத் மூலும், ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.718.74 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் தேங்கும் வழக்குகளை குறைக்கும் வகையில், அவ்வப்போது லோக்அதாலத் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வழக்குகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக்-அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று (செப்டம்பர் 13ந்தேதி) நடைபெற்றது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும் மூத்த […]
