Virat Kohli Retirement: இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங் பாரம்பரியம் என்பது மிக நீண்டது. இந்த பாரம்பரியம் சச்சின் டெண்டுல்கரிடம் உச்சம் பெற்றது. சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து விராட் கோலி (Virat) அந்த பேட்டிங் பாரம்பரியத்தை தொடர்ந்தார் எனலாம். டி20ஐ, ஐடிஐ, டெஸ்ட் என மூன்று பார்மட்களிலும் இந்திய அணிக்காக விராட் கோலி அளித்த பங்களிப்பு அளிப்பரியது.
Add Zee News as a Preferred Source
தோனியின் டி20ஐ, டெஸ்ட் ஓய்வு
ஓடிஐயில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனை முறியடித்து, 50வது சதத்தை அடித்தார் விராட் கோலி. அதேநேரத்தில், தோனி தலைமையில் துவண்டு கிடந்த டெஸ்ட் அணியை தனது கேப்டன்ஸியின் மூலம் உயிரூட்டினார், விராட் கோலி. கடந்த சில வருடங்களாக அவர் ஃபார்மில் சிறு தடுமாற்றம் தெரியவே கடும் விமர்சனங்கள் அவரை நோக்கி பாய்ந்தன.
அதிலும் டி20ஐயில் விராட் ஓபனிங்கில் இறங்குவது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால், 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விராட் கோலி அடித்த அந்த சதம்தான், 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக் கோப்பையையும், 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையையும் உறுதி செய்தது எனலாம். அந்த போட்டியோடு அவர் டி20ஐயில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்தாண்டின் தொடக்கத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது. அதில் விராட் கோலியும் பங்கும் முக்கியமானது. முன்னதாக, கடந்த டிசம்பர் – ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்தது. சிட்னி நடைபெற்ற தொடரின் கடைசி போட்டிதான் விராட் கோலிக்கும் சரி, ரோஹித் சர்மாவுக்கும் சரி கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது. கடந்த மே மாதம் இவ்விருவரும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
விராட், ரோஹித் தொடர்ந்து விளையாடுவார்களா…?
இனி இவர்களை சர்வதேச போட்டிகளில் ஓடிஐயில் மட்டுமே பார்க்க முடியும். அதைத் தவிர்த்து வருடத்திற்கு ஒருமுறை ஐபிஎல் தொடரில் பார்க்கலாம். விராட் கோலிக்கு 36 வயதாகிவிட்டது, ரோஹித் சர்மாவுக்கு 38 வயதாகிவிட்டது. இன்னும் இவர்கள் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள் என தெரியாது. அதேநேரத்தில், விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் வரும் 2027 ஐசிசி உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் அது சாத்தியமான என்பதும் கேள்விக்குறிதான்.
தாலிபான் தலைவர் வைத்த கோரிக்கை
இந்நிலையில், டெஸ்டில் இருந்து ஓய்வை பெற்றதை திரும்பப் பெற வேண்டும் என ஆப்கானிஸ்தானின் தாலிபான் இயக்க தலைவர் ஒருவர் கூறியிருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகத்தின் தலைவரும், தாலிபான் தலைவருமான அனஸ் ஹக்கானி பேசியதாவது, “ரோஹித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றதில் நியாயம் இருக்கிறது. ஆனால், விராட் கோலி ஓய்வு பெற்றதன் பின் உள்ள காரணமே எனக்கு தெரியவில்லை. உலகில் ஒரு சிலர் மட்டுமே தனித்துவமானவர்களாக விளங்குார்கள். என் விருப்பம், அவர் (விராட்) விரும்பினால் அவரது 50 வயது வரை விளையாட வேண்டும்.
அவர் இந்தியா ஊடகங்களால் வெறுப்புக்கு உள்ளாகியிருக்கலாம். ஆனால் அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கரின் மொத்த டெஸ்ட் ரன்களை தற்போது ஜோ ரூட் துரத்தி வருவதை பார்க்க முடிகிறது” என பேசியிருக்கிறார்.