Royal Enfield Meteor 350 updated – ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

மேம்படுத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ராயல் என்ஃபீல்டின் குறைந்த விலை க்ரூஸர் ரக மீட்டியோர் 350 பைக்கின் விலை ரூ. 1,95,762 முதல் ரூ.2,15,883 வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 2025 மீட்டியோரில் 7 விதமான நிறங்களுடன் LED ஹெட்லேம்ப், டிரிப்பர் பாட் நேவிகேஷன், LED டர்ன் இண்டிகேட்டர்கள், USB டைப்-சி ஃபாஸ்ட்-சார்ஜிங் போர்ட் மற்றும் அட்ஜெஸ்ட் லீவர்கள் உள்ளன.

ஃபயர்பால் மற்றும் ஸ்டெல்லர் வகைகளிலும் தற்பொழுது LED ஹெட்லேம்ப்கள் மற்றும் டிரிப்பர் பாட் ஆகியவற்றை தரநிலையாகப் பெறுகின்றன, அதே நேரத்தில் மீடியோர் 350 சூப்பர்நோவா மற்றும் அரோரா வகைகள்  அட்ஜெஸ்டபிள் லீவர்களுடன் வந்துள்ளது.

Variant Colourway Price in INR
(with revised GST @ 18%)
Fireball Fireball Orange & Fireball Grey INR 1,95,762
Stellar Stellar Matt Grey & Stellar Marine Blue INR 2,03,419
INR 1,99,990 (Kerala only)
Aurora Aurora Retro Green & Aurora Red INR 2,06,290
Supernova Supernova Black INR 2,15,883

முன்பாக கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 பைக்கில் புதுப்பிக்கப்பட்ட J-சீரிஸ் 350சிசி என்ஜின் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றதை போல தற்பொழுது மீட்டியோர் 350 மேம்படுத்தப்பட்ட 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100Rpm-ல் 20.2 bhp, 4,000Rpm-ல் 27 NM டார்க் வெளிப்படுத்தும் நிலையில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் இப்போது அதன் மோட்டார் சைக்கிள்களுக்கு 7 ஆண்டுகள் வரை சாலையோர உதவியுடன் விரிவான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது, இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி மூலம் கூடுதலாக 4 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ (எது முந்தையதோ அது) நிலையான 3 ஆண்டுகள் / 30,000 கிமீ உத்தரவாதத்தை விட அதிகமாக உள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.