சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இதுவரை 46,122 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் தெருநாய் தொல்லைகள் பெரும் சமூக பிரச்சினையாக மாறி வருகிறது. இதனால், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் […]
