Airtel : ஏர்டெல் நிறுவனத்தினர் லேட்டஸ்ட் நியூஸ் என்னவென்றால், சைபர் மோசடிகளுக்கு எதிராக எடுத்த அந்த நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் சக்சஸ் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. இந்தியன் சைபர் கிரைம் கோஆர்டினேஷன் சென்டர் (I4C) வெளியிட்ட டேட்டா, ஏர்டெல்லின் முயற்சிக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றியை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
Add Zee News as a Preferred Source
ஏர்டெல் நிறுவன ரிப்போர்ட்
ஏர்டெல் நெட்வொர்க்கில் சைபர் குற்றங்களால் ஏற்படும் ஃபைனான்சியல் லாஸ் கிட்டத்தட்ட 70% குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்த சைபர் கிரைம் இன்சிடென்ட்ஸ் 14.3% குறைந்திருப்பதாக ஐ4சி ரிப்போர்ட் சொல்கிறது. இந்த டேட்டா அனாலிசிஸ், ஏர்டெல்லின் ஃப்ராடு டிடெக்ஷன் சொல்யூஷனின் செயல்திறனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஏர்டெல்லின் வைஸ் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் கோபால் விட்டல், “எங்கள் நெட்வொர்க்கில் இருந்து ஸ்பேம் மற்றும் நிதி மோசடிகளை முழுமையாக நீக்குவதே எங்கள் மிஷன்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில், அவர்களின் AI-பவர்டு நெட்வொர்க் சொல்யூஷன், 48.3 பில்லியன் ஸ்பேம் அழைப்புகளையும், 3.2 லட்சம் மோசடி லிங்க்ஸ்-ஐயும் பிளாக் செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றியை, ஏர்டெல் நிறுவனத்தின் இரண்டு முக்கிய முயற்சிகள் சாத்தியப்படுத்தியுள்ளன. ஒன்று, செப்டம்பர் 2024-ல் அறிமுகப்படுத்தப்பட்ட நெட்வொர்க்-பேஸ்டு AI-பவர்டு ஸ்பேம் டிடெக்ஷன் சொல்யூஷன். இது ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை ரியல் டைமில் அடையாளம் காண்கிறது. மற்றொன்று, மே 2025-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தீங்கிழைக்கும் மலிஷியஸ் லிங்க்ஸ்-ஐ டிடெக்ட் செய்து பிளாக் செய்யும் ஒரு புதிய சொல்யூஷன். இந்த சேவைகள் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித அடிஷனல் காஸ்ட் இல்லாமல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சைபர் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?
சந்தேகத்திற்குரிய இணைப்புகள் (Suspicious Links): உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் (SMS), மின்னஞ்சல்கள் (Emails) அல்லது வாட்ஸ்அப் மெசேஜ்களில் வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.
ஓடிபி (OTP) மற்றும் பின்கள் (PIN): உங்கள் வங்கி அல்லது கிரெடிட் கார்டு ஓடிபி, பின் எண், அல்லது பாஸ்வேர்டு போன்ற முக்கியமான தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். வங்கி ஊழியர்கள் உட்பட யாரும் உங்களிடம் இந்தத் தகவல்களைக் கேட்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
போலி அழைப்புகள் (Fraudulent Calls): அரசு அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், லாட்டரி நிறுவனங்கள், அல்லது வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி வரும் போலி அழைப்புகளை நம்ப வேண்டாம்.
அங்கீகரிக்கப்படாத செயலிகள் (Unauthorized Apps): கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லாத பிற தளங்களிலிருந்து செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம்.
பொது வைஃபை (Public Wi-Fi): பொது இடங்களில் கிடைக்கும் வைஃபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி ஆன்லைன் பேங்கிங் அல்லது ஷாப்பிங் போன்ற முக்கியமான பணிகளைச் செய்யாதீர்கள்.
பாஸ்வேர்டு மேலாண்மை (Password Management): அனைத்து கணக்குகளுக்கும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்த வேண்டாம். கடினமான பாஸ்வேர்டுகளை (எண்கள், சிம்பல்கள், பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களின் கலவை) உருவாக்கி, அவற்றை அவ்வப்போது மாற்றுவது நல்லது.
சைபர் மோசடிக்கு ஆளானால் எப்படி புகார் அளிப்பது?
சைபர் மோசடிக்கு நீங்கள் ஆளாகியிருந்தால், உடனடியாகவும் விரைவாகவும் செயல்படுவது மிகவும் முக்கியம்.
சைபர் கிரைம் போர்ட்டல்: உடனடியாக மத்திய அரசின் சைபர் கிரைம் போர்ட்டலில் (https://cybercrime.gov.in/) புகார் அளியுங்கள். இது மிகவும் முக்கியமானது. நீங்கள் இழந்த பணத்தை உடனடியாக மீட்க இது உதவும்.
ஹெல்ப்லைன் எண்: 1930 என்ற எண்ணுக்கு உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள். இந்த எண் அனைத்து சைபர் குற்றங்களுக்கும் 24 மணி நேரமும் செயல்படும் அவசர உதவி எண் ஆகும்.
வங்கிக்குத் தகவல்: உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தால், உடனடியாக உங்கள் வங்கிக்குத் தகவல் தெரிவித்து, உங்கள் கணக்கைப் முடக்குமாறு (Freeze) கோருங்கள்.
உள்ளூர் காவல் நிலையம்: உள்ளூர் காவல் நிலையத்திலுள்ள சைபர் கிரைம் பிரிவில் எழுத்துபூர்வமான புகார் அளியுங்கள். நீங்கள் புகார் அளிக்கும்போது, எடுக்கப்பட்ட பணப் பரிவர்த்தனை விவரங்கள், வங்கி ஸ்டேட்மென்ட், மோசடி செய்பவர்களின் மொபைல் எண், குறுஞ்செய்தி விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் இணைக்க வேண்டும்.
About the Author
S.Karthikeyan