நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவ்வப்போது அது தொடர்பான விஷயங்கள் ட்ரெண்டாகும். அந்த வகையில் கடந்த சில தினங்களாக ஜெமினி ஏஐ-ல் நானோ பனானா ஏஐ இமேஜ்கள் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் தங்களது போட்டோக்களை பதிவிட்டு ரெட்ரோ ஸ்டைல் போட்டோவை உருவாக்கி வருகின்றனர். ஆனால் சிலர் தங்களது போட்டோவை பதிவிட்டு கையில் ரோஜாவுடன் புகைப்படங்களை பெற்று வருகின்றனர். பெண்களோ தங்களை அழகான புடவையுடன் புகைப்படத்தை உருவாக்கி வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source
இந்த நிலையில், பெண் ஒருவர் ஜெமினி ஏஐ-இல் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரெட்ரோ புகைப்படத்தை உருவாக்கி உள்ளார். ஜெமினி ஏஐ கொடுத்த புகைப்படத்தில் அந்த பெண் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் புளவுஸ் உடன் அழகாக இருந்தாலும், அதனை சூம் செய்து பார்த்த போது அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
அதாவது, பவானி என பெண் அவரது ஜெமினி ஏஐ அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், ஏஐ எந்த அளவிற்கு ஆபாத்து என்பதை தெரிவித்துள்ளார். பச்சை நிற சல்வாரில் இருந்த போட்டோவை அவர் பதிவிட்டு, ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கி தரக் கூறி இருக்கிறார். ஜெமினி ஏஐ-யும் அதனை ரெட்ரோ ஸ்டைல் மாடலில் மாற்றிக் கொடுத்துள்ளது. அந்த போட்டோவில் தான் அழகாக இருந்ததை கண்ட அவர், மிகவும் ரசனையுடன் உற்று நோக்கி உள்ளார்.
View this post on Instagram
அப்போது, ஜெமினி ஏஐ உருவாக்கி கொடுத்த போட்டோவில் அவருக்கு இடது கையில் மச்சம் இருந்துள்ளது தெரிந்துள்ளது. அவருக்கு நிஜமாகவே இடது கையில் மச்சம் இருக்கும் நிலையில், ஏஐ-இல் அது வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தனைக்கும் அவர் பதிவிட்ட போட்டோவில் மச்சம் தெரியவே இல்லை. அப்படி இருக்கையில், எப்படி மச்சம் தெரிந்தது என பவானி அந்த வீடியோ மூலம் கேட்டிருக்கிறார்.
ஜெமினி ஏஐ குறித்து பவானி பேசி இருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பவானி இதுகுறித்து கேள்வி எழுப்பி இந்த ஜெமினி ஏஐ பயன்படுத்துவது எவ்வளவு ரிஸ்க் என்றும், இது அச்சுறுத்தும் வகையில் உள்ளது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். நாம் நம்மை அறியாமலேயே பல முக்கிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்கிறோம். நம்மை பற்றி இணையத்தில் இருக்கும் தகவல்களை வைத்து டிஜிட்டல் புட்பிரிண்ட் என அழைக்கப்படும். அதனை வைத்தே ஏஐ போட்டோக்களை உருவாக்கும் என ஒருவர் கமெண்ட் கூறி இருக்கிறார்.
About the Author
R Balaji