India A vs Australia A: தற்போது ஆசிய கோப்பையில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள், ஆஸ்திரேலியா A அணிக்கு எதிராக 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றனர். இன்று செப்டம்பர் 16 முதல் இந்த போட்டி துவங்குகிறது. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த தொடர், இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரங்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு முக்கிய போட்டியாக அமைத்துள்ளது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்கலாம்.
Add Zee News as a Preferred Source
மீண்டும் டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ்
சுமார் 20 மாதங்களுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பும் வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், இந்த தொடரில் இந்தியா A அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தி கொள்ள முடியும். மேலும் இந்திய அணியில் விளையாடிய அனுபவம் உள்ள சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரும் இந்தியா A அணியில் இடம் பெற்றுள்ளனர்.
பலமுறை இந்திய அணியில் இடம்பெற்றும், இன்னும் அறிமுகமாகாத தொடக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரனுக்கும் இது ஒரு முக்கியமான தொடராகும். மூத்த வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர், இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரருக்கான இடத்தை பிடிக்க சாம் கான்ஸ்டாஸ் மற்றும் நாதன் மெக்ஸ்வீனி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியா A vs ஆஸ்திரேலியா A போட்டியை எப்படி பார்ப்பது?
இன்று நடைபெறும் இந்தியா A vs ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையிலான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடர், இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்ஒர்க்கில் ஒளிபரப்பப்படுகிறது. இருப்பினும் ஜியோஸ்டார் செயலி மூலம் போட்டியை ரசிகர்கள் நேரலையில் கண்டு மகிழலாம்.
அணி விவரங்கள்
இந்தியா A அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், துருவ் ஜுரெல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, மானவ் சுதர், யாஷ் தாக்கூர்.
ஆஸ்திரேலியா A அணி: சேவியர் பார்ட்லெட், கூப்பர் கொன்னோலி, ஜாக் எட்வர்ட்ஸ், ஆரோன் ஹார்டி, கேம்ப்பெல் கெல்லவே, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, பெர்கஸ் ஓ’நீல், ஆலிவர் பீக், ஜோஷ் பிலிப், கோரி ரோச்சிச்சியோலி, லியாம் ஸ்காட்.
Shreyas Iyer back in whites!
Here’s a look at the India A squad for the two multi-day matches against Australia A in Lucknow
1st Match Sept 16-19, 9:30 AM
2nd Match Sept 23-26, 9:30 AM
Watch India A Australia A, LIVE! pic.twitter.com/YkgikI4WKq
— Star Sports (@StarSportsIndia) September 6, 2025
About the Author
RK Spark