ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு தற்போது அவர் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை அவருக்கு வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டார். தற்போது ஓராண்டுக்கு பிறகு டி20 அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
Add Zee News as a Preferred Source
சுப்மன் கில்லை பலரும் அணியிலேயே எடுக்க மாட்டார்கள் என கூறி வந்தனர். இந்த சூழலில், அவரை அணியில் எடுத்து அடுத்த கேப்டனாக்கும் திட்டத்தில் துணை கேப்டன் பதவியை அளித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விரைவில் முன்று வடிவ இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் காரணம் என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக மனோஜ் திவாரி பேசுகையில், சுப்மன் கில் சிறப்பான பேட்ஸ்மேன். இந்திய அணி முதல் ஐபிஎல் வரை அவர் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அதே சமயம் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் கடந்த ஓராண்டாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். டி20 அணியில் தொடரில் ஓப்பனிங்கில் கலக்கி வந்த அவர்கள் 2027 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பார்க்கப்பட்டனர்.
இந்த சூழலில் சுப்மன் கில் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். இதனால் ஓப்பனிங் காமினேஷன் மாறி உள்ளது. சஞ்சு சாம்சனின் பேட்டிங் வரிசை மாறி இருக்கிறது. இதற்கு கம்பீர் தான் காரணம். சும்பன் கில்லை அணிக்குள் கொண்டு வந்து அவருக்கு துணை கேப்டன் பதவியை வழங்க முழுக்க முழுக்க கவுதம் கம்பீர் தான் காரணம். ஏனென்றால், கம்பீருக்கு தான் சொல்வதை கேட்கும் ஒரு வீரர் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
அந்த வகையில், கம்பீரின் பேச்சை சுப்மன் கில் கேட்கக்கூடியவர். அதனாலேயே சும்பன் கில்லுக்கு துணை கேப்டன் பதவியை கொடுத்துள்ளார். இது அவரை கேப்டனாக்கும் திட்டம். விரைவில் அவர் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் மாற்ற கவுதம் கம்பீர் முயற்சிப்பார் என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
About the Author
R Balaji