சென்னை: தமிழ்நாடு அரசு சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான டெண்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் (2025) மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்திற்கு […]
