டெல்லி,
இந்தியாவில் வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதுவரை நாடு முழுவதும் ஏசி வசதியுடன் கூடிய 150 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, இந்த வந்தே பாரத் ரெயில்களில் இருக்கை வசதி மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் சேவை எப்போது அறிமுகம் ஆகும் என்பது தொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ரெயில்வே மந்திரி கூறியதாவது, படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரெயில் டெல்லியில் உள்ள ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதேவேளை, படுக்கை வசதியுடன் கூடிய 2வது வந்தே பாரத் ரெயில் தயாரிபு பணி அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் நிறைவடையும்.
அந்த ரெயில் தயாரானதும் படுக்கை வசதியுடன் கூடிய 2 வந்தே பாரத் ரெயில்களும் ஒரேநேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.