திருச்சி: ‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்ற தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவித்தார். கல்வியை தாய்மொழியில்தான் சிறப்பாக கற்க முடியும். அதேவேளையில், ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் உலக அளவில் […]
