அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார். இவருக்கு வயது 56.
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எல். வெங்கடேசனுக்கும், சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராணி வெங்கடேசனுக்கும் மகளாகப் பிறந்தவர்தான் இவர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாழையடி என்கிற கிராமம்தான் பீலாவின் சொந்த ஊர்.
ஆனால், பீலா படித்து வளர்ந்தது சென்னையில்தான்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற இவர் பின்னர் இந்தியக் குடிமைப்பணி தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ஆனார்.
பிஹார், ஜார்கண்ட் மாநிலங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இவர் பணிபுரிந்திருக்கிறார்.
செங்கப்பட்டி மாவட்டத்தின் துணை ஆட்சியராகவும், மீன்வளத்துறை இயக்குநராகவும் இவர் பணிபுரிந்திருக்கிறார்.
2020-ம் ஆண்டு சுகாரத்துறை செயலாளர் பதவிக்கு வந்து கொரோனா பேரிடர் காலத்தில் செய்த பணிகள் பலருக்கும் நினைவிருக்கலாம்.

தற்போது இவர் தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.