e-Aadhaar App: இ-ஆதார் செயலி வந்தாச்சு! இனி எல்லாமே ஈஸி

e-Aadhaar App: மத்திய அரசு ஆதார் விவரங்களைத் திருத்துவதை எளிதாக்கும் வகையில், ஒரு பிரத்யேக மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் செயலியானது, ஆதார் சேவை மையங்களில் (Aadhaar Seva Kendras) நீண்ட வரிசையில் காத்திருக்காமல், உங்கள் பெயர், முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே நேரடியாக மாற்றியமைக்க உதவும்.

Add Zee News as a Preferred Source

இ-ஆதார் செயலி என்றால் என்ன?

விரைவில் வரவிருக்கும் இ-ஆதார் செயலி (e-Aadhaar App), ஆதார் விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்ய ஏதுவான ஒரு எளிய, பாதுகாப்பான மற்றும் பயன்படுத்த எளிதான தளத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி அறிமுகமானவுடன், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கியமான தகவல்களை, நேரடி பதிவு மையங்களுக்குச் செல்லாமல் திருத்த முடியும். இதன் மூலம் பேப்பர் வொர்க்கும் இருக்காது, கால தாமதமும் இருக்காது.

பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்தச் செயலியில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முக அடையாள சரிபார்ப்பு (Face ID verification) போன்ற அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இது டிஜிட்டல் செயல்முறையைப் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு மட்டுமே நேரில் செல்ல வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதார் அப்டேட் 

ஆதார் அப்டேட் செயல்முறையை மேலும் சீராக்க, மற்ற அரசுத் தரவுத்தளங்களில் (Government Databases) இருந்து சரிபார்க்கப்பட்ட தகவல்களைச் செயலி தானாகவே பெற்றுக்கொள்ள Unique Identification Authority of India (UIDAI) திட்டமிட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், பிறப்புச் சான்றிதழ்கள், பான் கார்டுகள், பாஸ்போர்ட்டுகள், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டுகள் (PDS வழியாக) மற்றும் MNREGA பதிவுகள் போன்ற ஆவணங்கள் ஆதார் புதுப்பிப்பு அமைப்புடன் நேரடியாக இணைக்கப்படும். மின்சாரக் கட்டணம் (Electricity bills) போன்ற பயன்பாட்டு (Utility) விவரங்களையும் விரைவான முகவரிச் சரிபார்ப்புக்காக செயலி பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.

ஆதார் சரிபார்ப்பு

இதற்கிடையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) ஆதார் நல்லாட்சிக்கான இணையதளம் என்ற ஒரு தளமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தளமானது, ஆதார் அங்கீகாரக் கோரிக்கைகளுக்கான (Aadhaar authentication requests) ஒப்புதல் செயல்முறையை எளிதாக்குவதையும், சேவைகளை மேலும் திறமையாகவும் பயனர் நட்புடன் கூடியதாகவும் மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

காகிதங்களில் எழுதி கோரிக்கை வைப்பதும், பதிவு மையங்களைச் சார்ந்திருப்பதையும் குறைப்பதன் மூலம், UIDAI ஆனது மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், ஆள்மாறாட்ட மோசடிகள் (identity fraud) ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்க விரும்புகிறது. விரைவில், ஆதார் வைத்திருக்கும் மில்லியன் கணக்கானவர்களுக்கு, தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பிப்பது என்பது விரல் நுனியில் கிடைக்கும் ஆச்சரியமான அரசின் சேவையாக மாறப்போகிறது.

 

About the Author


S.Karthikeyan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.