அணியில் இருந்து திலக் வர்மா திடீர் விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு!

ஆசிய கோப்பை 2025 தொடருக்காக பலரும் காத்துக் கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தொடர் இருக்கும் என்பதால் ஒவ்வொரு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் திலக் வர்மா, துலீப் ட்ராபி தொடரிலிருந்து விலகியுள்ளார். துலீப் டிராபியில் தெற்கு மண்டல அணிக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக புதிய கேப்டன் மற்றும் மாற்று … Read more

சென்னையின் முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்: 1,800-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு

சென்னை: சென்னையில் விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் பந்தல் அமைத்து, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 1,800-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. … Read more

உ.பி.யின் ஆக்ராவில் போலி மருந்து விற்பனையாளர் கைது: புதுச்சேரியில் தயாராகி அனுப்பப்படுவதாக தகவல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவின் மொத்த மருத்து சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லக்னோவில் உள்ள மாநில காவல் துறை சிறப்பு படை (எஸ்டிஎப்) தலைமையகத்துக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்யும் பணி உதவி மருந்து ஆணையர் நரேஷ் மோகன் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தலைமையிலான குழுவும் எஸ்டிஎப் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர். எஸ்டிஎப் படையினர் ஒரு ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனர். … Read more

சுமார் 4 கிலோ கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்க விவசாயி!

பென்சில்வேனியா: அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது மிகப்பெரிய அளவிலான கத்தரிக்காய் விளைந்துள்ளது. இந்த கத்தரிக்காயின் எடை 3.969 கிலோவாக இருந்தது. வழக்கமான கத்தரிக்காயைப் போல 12 மடங்கு பெரியதாக உள்ள இது கிட்டத்தட்ட வீட்டுப் பூனையின் அளவு ஆகும். இதுகுறித்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு தகவல் தரப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி அந்நிறுவன அதிகாரிகள் … Read more