WhatsApp : வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு, குழுக்களில் உடனடியாகப் பேச உதவும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் சாட்(Group Voice Chat). இது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் குழு அழைப்பு (Group Call) போல இல்லாமல், ஒரு நேரடி அரட்டை அறை (Live Chat Room) போலச் செயல்படுகிறது. இந்த வசதி மூலம், குழுவில் உள்ள உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யாமல், தேவைப்படும்போது அவர்கள் வந்து சேர்ந்து உரையாட முடியும்.
Add Zee News as a Preferred Source
வழக்கமான குரூப் அழைப்பில், குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் அழைப்பு மணி (Ringing Call) ஒலிக்கும். ஆனால், இந்த புதிய வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் சாட்டில், யாருக்கும் அழைப்பு மணி அடிக்காது. மாறாக, ஒரு செய்தி அறிவிப்பு (Push Notification) மட்டுமே அனுப்பப்படும். இதனால், உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும்போது அரட்டையில் வந்து சேரலாம் (Join) அல்லது வெளியேறலாம் (Leave). அதே சமயம், அரட்டையில் பேசிக்கொண்டிருக்கும்போதும், உறுப்பினர்கள் குழுவில் வழக்கம் போலச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும்.
வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் சாட் தொடங்குவது எப்படி?
– வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் சாட் தொடங்குவது மிக எளிது.
– நீங்கள் சாட் தொடங்க விரும்பும் வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் சாட் (Group Chat) திறக்கவும்.
– மேல் வலது மூலையில் உள்ள வாய்ஸ் சாட் பட்டன் (Voice Chat button) ஐகானை கிளிக் செய்யவும்.
– பின்னர் வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் சாட் (Start Voice Chat) என்பதை கிளிக் செய்யவும்.
– சாட்டில் பங்கேற்கும் உறுப்பினர்கள் உங்கள் திரையின் கீழ் பகுதியில் ஒரு பேனரில் (Banner) காட்டப்படுவார்கள். குரல் அரட்டையில் 32 பேர் வரை சேர முடியும்.
முக்கிய வேறுபாடுகள் மற்றும் தகவல்கள்
* குரூப் வாய்ஸ் சாட்டுக்கும், வழக்கமான குழு அழைப்புக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதன் செயல்படும் விதம்தான். வாய்ஸ் சாட்டில் யாரும் ரிங் செய்யப்படுவதில்லை, இது அதிக நெகிழ்வுத்தன்மையை (Flexibility) வழங்குகிறது.
* வாய்ஸ் சாட்கள் உங்கள் முதன்மைச் சாதனத்தில் (Primary Device) இருந்து மட்டுமே தொடங்க முடியும். லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) போன்ற இணைக்கப்பட்ட சாதனங்களில் இருந்து இதைத் தொடங்க முடியாது.
* உங்கள் குழுவில் ஒரு வாய்ஸ் சாட் செயலில் இருக்கும்போது, சாட்டின் தலைப்பில் (Chat Header) ஒரு ‘செயலில் உள்ள குறியீடு’ (Active Chat Indicator) காண்பிக்கப்படும். அதைத் தட்டி நீங்கள் உடனடியாகச் சேரலாம்.
* வாய்ஸ் சாட்டில் இருந்து வெளியேற, மைக்ரோஃபோன் மீது ஒரு கோடு கொண்ட மியூட் ஐகானை (Mute Icon) தட்டினால் போதும். சாட்டில் உள்ள அனைவரும் வெளியேறினாலோ, அல்லது முதல் நபர் சேர்ந்த பிறகு 60 நிமிடங்களுக்கு (ஒரு மணி நேரம்) வேறு யாரும் சேரவில்லை என்றாலோ, இந்த சாட் தானாகவே முடிந்துவிடும்.
* இதன் டேட்டா பயன்பாடு வழக்கமான குரல் அழைப்புகளைப் போலவே இருக்கும். இணைப்புத் தரம் மற்றும் உரையாடலின் கால அளவைப் பொறுத்து டேட்டா செலவாகும்.
* இந்த புதிய வசதி, குழுவில் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி உடனடியாக விவாதிக்கவோ (Discuss) அல்லது ஒருங்கிணைக்கவோ (Coordinate) விரும்பும்போது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
About the Author
S.Karthikeyan