எந்த சண்டையும் இல்லாதபோது தமிழகம் யாருடன் போராடும்? – ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி 

சென்னை: ​தி​முக​வின் ‘தமிழ்​நாடு போராடும், தமிழ்​நாடு வெல்​லும்’ எனும் பிரச்​சார வாசகத்தை விமர்​சித்து எந்த சண்​டை​யும் இல்​லாத போது தமிழகம் யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

வள்​ளலாரின் 202-வது பிறந்​த​நாள் விழாவை முன்​னிட்டு ஆளுநர் மாளி​கை​யில் 2 நாட்​கள் சிறப்பு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்டுவரு​கின்​றன. அதன்​படி நேற்று நடை​பெற்ற விழா​வில் பேசிய ஆளுநர் ஆர்​.என்​.ரவி ‘திரு​வருட்​பா-ஆறாம் திரு​முறை’ எனும் நூலின் இந்​திப்பதிப்பை வெளி​யிட்​டார். தொடர்ந்து மாணவர்​களால் காட்​சிப்​படுத்​தப்​பட்ட வள்​ளலார் சன்​மார்க்க கண்​காட்​சி​யை​யும் பார்​வை​யிட்​டார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இன்​றைய உலகில் இருக்​கும் பிரி​வினை​வாதம், வறுமை ஆகியவற்றை போக்​கும் வழிகள் வள்​ளலாரின் தத்​து​வங்​களுக்கு உள்​ளன. வள்​ளலாருக்கு தரவேண்​டிய மரி​யாதை இன்​னும் கிடைக்​காதது வருத்​த​மாக இருந்​தது. அதனால்​தான் 2023-ம் ஆண்டு முதல் ஆண்​டு​தோறும் வள்​ளலார் விழாவை நடத்தி வரு​கிறேன். வள்​ளலாரை தின​மும் வணங்க வேண்​டும் என்​ப​தற்​காகவே வள்​ளலார் சிலை​யை​ ராஜ்பவனில் அமைத்​தேன்.

அத்​தி​யா​வசிய தேவைகளுக்​காக மட்​டுமின்றி மரங்களைவெட்​டு​வ​தா​லும், காடுகளை அழிப்​ப​தா​லும் பரு​வநிலை மாற்​றம் ஏற்​படு​கிறது. சில ஆண்​டு​களுக்கு முன்பு தென் தமிழகத்​தில் மக்​கள் மழை​யாலும், மறு​புறம் வெப்ப அலையாலும் பாதிக்​கப்​பட்​டனர். இது இயற்​கை​யின் கோபம். பேராசையோடு இருந்​தால் அதன் விளைவுகளை சந்​திக்க நேரிடும். இதை மாற்ற நாம் சன்​மார்க்க பாதை​யில் பயணிக்க வேண்​டும்.

அதே​போல், வன்​முறை நிகழ்​வு​கள் செய்​தி​களாக வரு​கின்​றன. பட்​டியலின சமு​தா​யத்​துக்​கான உரிமை மிக​வும் கேள்விக்​குறி​யாகி இருக்​கிறது. பெரும்​பான்​மை​யாக உயர்​கல்வி படித்த தமிழகத்​தில் எப்​படி மக்​கள் இவ்​வாறு வழிநடத்​தப்​படு​கிறார்​கள் என்று சிந்​திக்க தோன்​றுகிறது. படிப்​பறிவு மட்​டுமே பாகு​பாட்டை மாற்​றாது. இந்த உயர், தாழ்வை சரிசெய்ய ஒரே வழி சமு​தாய சீர்​திருத்​தம் தான்.

மறு​புறம் அரசி​யல் கட்​சிகள் பிரி​வினையை ஏற்​படுத்​தும் பிரித்​தாளும் முயற்​சிகளில் தொடந்து ஈடு​படு​கின்றன. இதை அழிக்​கக்​கூடிய வழிகளை அடுத்து வரும் சந்​த​திக்கு கடத்த வேண்​டும். அதற்கு ஒரே வழி வள்​ளலார் அறி​வுரைகள் மக்​களை சென்​றுசேர வேண்​டும். வள்​ளலாரின் சன்​மார்க்​கம் எல்​லாரை​யும் சென்​றடைய வேண்​டும். பல்​கலைக்​கழகங்​களில் வள்​ளலார் தொடர்​பாக ஆராய்ச்​சிகளை மேற்​கொள்ள இருக்​கைகளை உரு​வாக்க வேண்​டும்.

நான் மாநிலம் முழு​வதும் பயணிக்​கும்​போது ‘தமிழ்​நாடு போராடும்’ என சுவர்​களில் எழு​தி​யுள்​ளனர். தமிழகம் யாருடன் போராடும், தமிழகத்தை எதிர்த்து யாரும் போராட​வில்​லை​யே. நாம் அனை​வரும் சகோ​தர, சகோ​தரி​கள். நம்​முள் சண்​டைகள் இல்​லை, பிரச்​சினை இல்​லை. நாம் நிச்​சய​மாக ஒன்​றிணைந்​துவாழ வேண்​டும்​. இவ்​வாறு ஆளுநர் ரவி பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.