குண்டுவீச்சை நிறுத்துமாறு டிரம்ப் கூறிய பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 6 பேர் உயிரிழப்பு

ஜெருசலேம்: இஸ்​ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்​டு​வரும் முயற்​சி​யாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார். இதை ஏற்​ப​தாக இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு அறி​வித்​தார். எனினும் ஹமாஸ் அமைதி காத்​த​தால் அதற்கு ட்ரம்ப் 3 நாள் கெடு விதித்​தார்.

இந்​நிலை​யில் அமை​திக்கு ஹமாஸ் தயா​ராக இருப்​ப​தாக​வும் பிணைக் கைதி​களை விடுவிக்க ஒப்​புக்​கொண்​டுள்​ள​தாக​வும் பிற நிபந்​தனை​கள் சில​வற்றை ஏற்​றுக்​கொண்​டுள்​ள​தாக​வும் ட்ரம்ப் அறி​வித்​தார். மேலும் காசா மீது குண்டுவீச்சை நிறுத்துமாறு இஸ்ரேலை கேட்டுக்கொண்டார். இந்​நிலை​யில் ட்ரம்​பின் இந்த அறி​வுரைக்கு அடுத்த சில மணி நேரத்​தில் காசா​வில் இஸ்​ரேலிய துப்​பாக்​கிச் சூட்​டில் 6 பேர் கொல்​லப்​பட்​ட​தாக உள்​ளூர் அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

முன்​ன​தாக ஹமாஸின் ஒப்​புதலை தொடர்ந்து இஸ்​ரேலிய பிரதமர் நெதன்​யாகு​வின் அலு​வல​கம் நேற்று அதி​காலை, “இஸ்​ரேலிய பிணைக் கைதிகளை விடு​விப்​ப​தற்​கான டிரம்ப் அமைதி திட்​டத்​தின் முதல் கட்​டத்தை செயல்​படுத்த இஸ்​ரேல் தயா​ராகி வரு​கிறது’’ என அறி​வித்​தது.

மேலும் கா​சா​வில் தாக்​குதலை குறைக்க ராணுவத்​துக்கு அறி​வுறுத்தப்பட்டுள்ளதாக இஸ்​ரேலிய ஊடகங்​கள்​ செய்​தி வெளியிட்​டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.