ரூ.11-க்கு தீபாவளி விபத்து காப்பீடு, ஆன்லைனில் எடுக்கலாம் – முழு விவரம்

Diwali insurance : தீபாவளிக்கு இன்னும் ஏறத்தாழ 15 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால், இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இனிப்புகள், புத்தாடைகள், பட்டாசுகள் ஆகியவற்றை தடபுடலாக வாங்க திட்டமிடும் நிலையில், பட்டாசு விபத்துக்கள் மூலம் ஏற்படும் காயங்களிலிருந்து நிதிப் பாதுகாப்பை வழங்க, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நிறுவனமான PhonePe காப்பீடு பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வெறும் 11 ரூபாய் விலையில் இந்த பட்டாசு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Add Zee News as a Preferred Source

பட்டாசு காப்பீடு என்றால் என்ன?

PhonePe நிறுவனம் வழங்கியுள்ள இந்த மலிவு விலை காப்பீட்டுத் திட்டம், 11 ரூபாய் பிரீமியத்தில் (ஜிஎஸ்டி உட்பட), 25,000 ரூபாய் வரையிலான பாதுகாப்பை 11 நாட்களுக்கு வழங்குகிறது. பட்டாசு தொடர்பான விபத்துகள், தீக்காயங்களுக்கு அவசர காலங்களில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காகவே இந்தக் காப்பீடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு வரம்புகள் மற்றும் கால அளவு இங்கே பார்க்கலாம்

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

கவரேஜ்: இந்தக் காப்பீடானது பாலிசிதாரர், அவரது மனைவி அல்லது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் வரை ஒரே பாலிசியின் கீழ் உள்ளடக்குகிறது.

செல்லுபடியாகும் காலம்: இது அக்டோபர் 12, 2025 முதல் தொடங்கி 11 நாட்களுக்குச் செல்லுபடியாகும். இந்தத் தேதிக்குப் பிறகு எப்போது வாங்கப்பட்டாலும் வாங்கிய நாளிலிருந்து 11 நாட்களுக்குப் காப்பீடு கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் என்னென்ன கவர் ஆகும்?

இந்தக் காப்பீட்டுத் திட்டமானது, பட்டாசு விபத்துகள் காரணமாக ஏற்படும் மருத்துவச் செலவுகள் மற்றும் இழப்புகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. 24 மணி நேரத்திற்கு மேலான மருத்துவமனைச் சிகிச்சை செலவுகள். பகல் தேவைச் சிகிச்சை (Day-Care Treatment) கவர் ஆகும். 24 மணி நேரத்திற்கும் குறைவான சிகிச்சை, அதாவது அவுட்-பேஷண்ட் சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளலாம். விபத்தினால் ஏற்படும் மரணமும் இதில் அடங்கும்.

பட்டாசு காப்பீட்டைப் பெறுவது எப்படி?

தீபாவளிக்கு முன்னதாக இந்தக் காப்பீட்டைப் பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். இந்தக் காப்பீட்டைப் பெற ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகும்.

PhonePe செயலியைப் பதிவிறக்கி நிறுவவும்.

* செயலியில் உள்ள ‘Insurance’ (காப்பீடு) பகுதிக்குச் சென்று, ‘Firecracker Insurance’ (பட்டாசு காப்பீடு) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

* அடுத்ததாக, 25,000 ரூபாய் காப்பீட்டுத் தொகை மற்றும் ரூ. 11 பிரீமியம் கொண்ட திட்ட விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

* கட்டணத்தைச் செலுத்தும் முன், காப்பீடு வழங்குநர் மற்றும் திட்டப் பலன்கள் பற்றிய விரிவான தகவல்களைப் பார்க்கவும்.

* அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, பாலிசிதாரரின் தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.

* பூர்த்தி செய்த தகவல்களை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்து, ‘Proceed to Pay’ (பணம் செலுத்த தொடரவும்) என்பதைத் தட்டி பரிவர்த்தனையை முடிக்கவும்.

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் PhonePe, ஆகஸ்ட் 2025 நிலவரப்படி 65 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 4.5 கோடிக்கும் அதிகமான வணிகர்கள் PhonePe மூலம் டிஜிட்டல் பணம் செலுத்துதலை ஏற்றுக்கொள்கின்றனர். பண்டிகைக் காலத்தில் இந்தச் சிறிய காப்பீடு, ஒரு பெரிய நிதிச் சுமையிலிருந்து குடும்பங்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது.

(முக்கிய குறிப்பு : இந்த செய்தி தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டம் தொடர்பான எந்தவொரு சாதக, பாதக அம்சங்களுக்கும் Zee Tamil News பொறுபேற்காது. நிதி சார்ந்து எடுக்கும் முடிவுகள் அவரவர் தனிப்பட்ட விருப்பங்களைச் சார்ந்தது. நிபுணர்களின் ஆலோசனையை பெற்று இந்த காப்பீடு எடுப்பது குறித்து முடிவெடுக்கவும்)

About the Author


S.Karthikeyan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.