இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தனர். இந்த சூழலில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக 2027ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை வரை விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Add Zee News as a Preferred Source
ஆனால் இருவரின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி உள்ளது. ஏனென்றால், வரும் அக்டோபர் 19ஆம் தேதி தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டன் பதிவில் இருந்து நீக்கப்பட்டு வெறும் தொடக்க வீரராக மட்டும் இடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக இருவருமே 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை இந்திய அணியில் நீடிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2027 உலகக் கோப்பையின்போது இருவரும் 40 வயதை நெருங்கிவிடுவார்கள். இதனால், அவர்களின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி உள்ளது.
இதை அவர்கள் நிச்சயம் செய்ய வேண்டும்
இந்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய ஒருநாள் அணியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால், இதனை அவர்கள் நிச்சயம் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரோகித், கோலி இருவரும் இந்திய அணிக்காக இதுவரை ஆற்றிய பங்கு என்பது சொல்ல முடியாத அளவுக்கு மிகபெரியது. ஆனாலும், தங்களை அவர்கள் தொடர்ந்து நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் தொடர முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.
விஜய் ஹசாரே டிராபி
எனவே அவர்கள் இருவரும் எதிர்வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாட வேண்டும். ஏனென்றால் இந்திய அணிக்கு அதிக அளவு ஒருநாள் போட்டிகள் இல்லை, மிகக்குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே அவர்களை நிரூபிக்க முடியும். எனவே அவர்கள் சலிக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்படி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவருக்கு நிர்வாகம் வாய்ப்பளிக்கும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடர் வரும் 14ஆம் தேதி முடிவடையும் நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதுவரை ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji