சிந்த்வாரா,
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்டதில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது சர்ச்சையானது. இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்து உள்ளது.
இதுபற்றி சிந்த்வாராவின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திரேந்திரா சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, 14 குழந்தைகள் பலி என எங்களுக்கு அறிக்கை தரப்பட்டு உள்ளது. இழப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுடைய கணக்கிற்கு பணம் சென்று விட்டது.
8 குழந்தைகளுக்கு சிந்த்வாராவின் நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிர்வாக அளவில் அதனை கவனிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. குழு ஒன்றை, மருந்தாளுநர் உருவாக்கி உள்ளார். தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகளை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. அதனை பறிமுதல் செய்து வருகிறோம். சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, அது தமிழகத்திற்கு விரைந்துள்ளது என்று கூறியுள்ளார்.