சென்னை: ரோந்து பணியிலிருந்த போலீஸ் எஸ்ஐ ஒருவரை தெரு நாய் கடித்து குதறியது. சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் நாய்கடி முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை.
இருசக்கர வாகனத்தில் ரோந்து இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பணியில் உள்ள, வினோத் குமார் (35) என்ற நேரடி எஸ்.ஐ அவரது இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.
அதே பகுதியில் உள்ள அருணாச்சலம் தெருவில் சென்றபோது அவரை தெரு நாய் ஒன்று துரத்தி பின் தொடர்ந்தது. பின்னர் திடீரென அவரைக் கடித்து குதறியது. பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சென்று முதல் உதவி சிகிச்சை பெற்றார்.