சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் SF என இரண்டிலும் புதிய நிறங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேக்டூ ஸ்டைல் மாடல் விலை ரூ.1.31 லட்சம் மற்றும் ஃபேரிங் ஸ்டைல் வேரியண்ட் ரூ.1.39 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
155cc என்ஜின் பெற்ற நேக்டூ ஸ்டைலை பெற்ற ஜிக்ஸர் மெட்டாலிக் ஊர்ட் கிரே + பேர்ல் மிரா ரெட் மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் + மெட்டாலிக் ஊர்ட் கிரே ஆகிய மூன்று வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஃபேரிங் ஸ்டைலை பெற்ற ஜிக்ஸர் எஸ்எஃப் ஆனது மெட்டாலிக் ஊர்ட் கிரே + பேர்ல் மீரா ரெட்
மற்றும் கண்ணாடி ஸ்பார்க்கிள் கருப்பு + மெட்டாலிக் ஊர்ட் கிரே என இரண்டு நிறங்களை பெற்றுள்ளது.
155cc என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 13.6hp பவர், 13.8NM டார்க் ஆனது 6000rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 17 அங்குல வீலுடன் கிடைக்கின்றது.
கூடுதல் சலுகையாக, சுஸுகி நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு ரூ.5,000 வரையிலான பண்டிகை கால எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், ரூ.1,999க்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாத தொகுப்புகள் அல்லது ரூ.7,000 வரையிலான காப்பீட்டு ஆதரவையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் 100% நிதியுதவி அல்லது எந்த அடமான சலுகைகளும் இல்லாமல் தேர்வு செய்யலாம்.