பெண்கள் உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இன்று மோதல்

கொழும்பு ,

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் , கொழும்பில் இன்று நடக்கும் 9-வது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 16 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.