என்னைய பஸ்ல ஏத்தல.. இதனாலதான் ரோகித் அப்படி செய்தார்.. மனம் திறந்த ஜெய்ஸ்வால்!

Yashasvi Jaiswal About Rohit Sharma: இந்திய டெஸ்ட் அணி கடந்த டிசம்பர் – ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரை விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வென்றாலும், அதன் பின்னர் ஆஸ்திரேலியா அணியே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் முதல் போட்டியில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால், அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணியாக அமைந்தார். அத்தொடரில் மொத்தமாக அவர் 391 ரன்களை எடுத்திருந்தார். 

Add Zee News as a Preferred Source

முன்னதாக இத்தொடரில் 2வது டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு அடிலெய்ட் இருந்து 3வது டெஸ்ட் போட்டியை விளையாட பிரிஸ்பேன் நகருக்கு பயணித்தனர். அப்போது, அனைத்து வீரர்களுக்கு குறித்த நேரத்திற்கு பேருந்துக்கு வந்தனர். ஆனால் ஜெய்ஸ்வால் மட்டும் தாமதமாக வந்தார். இதனால் அப்போது கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கோபமடைந்தார். 

2 தண்டனைகள் 

ஜெய்ஸ்வால் தாமதமாக வந்ததற்கு 2 தண்டனைகளை கொடுத்தார். ஒன்று அவரது பொருட்களை மேனேஜருக்கு பதிலாக அவரையே தூக்கிமாறு கூறினார். மற்றொன்று அவரை அங்கேயே விட்டுவிட்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி புறபட்டு சென்றனர். பின்னர் ஜெய்ஸ்வால் தனி கார் மூலம் பிரிஸ்பேன் நகருக்கு சென்று இந்திய அணியுடன் இணைந்துக்கொண்டார். இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதிரடி வீரர் ஜெய்ஸ்வால். 

மன்னிப்பு கேட்க சொன்னார்

அன்று நாங்கள் புறப்படும் நேரம் தான் பேருந்துக்கு வரும் நேரம் என நான் நினைத்தேன். அங்கே கொஞ்சம் குழப்பம் நேர்ந்தது. நான் தாமதமாக வந்ததற்கு ரோகித் பாய் என்னை திட்டினார். அது மோசமல்ல. அவரிடம் இது பொதுவான தவறு, அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சொன்னேன். அதனை ஏற்றுக்கொண்ட ரோகித் சர்மா பராவாயில்லை, இனி விழிப்புணர்வுடன் இரு என கூறினார். 

அந்த தருணங்களிலும் ரோகித் பாய் வேடிக்கையாக நடந்துக்கொண்டார். தாமதமாக வந்ததற்காக என்னை அனைவரிடமும் மன்னிப்பு கேட்க சொன்னார். இறுதியில் என்னை விட்டுவிட்டு பேருந்து சென்றது. சரி பராவாயில்லை என தனி காரில் மைதானத்திற்கு சென்றேன். நான் குறித்த நேரத்திற்கு இருந்திருக்க வேண்டும். எப்படி அது நடந்தது என்று தெரியவில்லை என ஜெய்ஸ்வால் கூறினார். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.