முதல்-அமைச்சர் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை அணி சாம்பியன்

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை உள்பட 13 இடங்களில் நடந்து வருகிறது.

இந்த போட்டி தொடரின் 7-வது நாளான நேற்று சென்னை பல்கலைக்கழக யூனியன் மைதானத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றில் சென்னை-ஈரோடு அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஈரோடு அணி 10 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 45 ரன்களே எடுத்தது. இதனால் சென்னை அணி 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. ஈரோடு அணி வெள்ளிப்பதக்கமும், கிருஷ்ணகிரி வெண்கலப்பதக்கமும் பெற்றது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.