சென்னை: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் எம்எல்ஏவை அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பசும்பொன் தேவர் நினைவிடத்தில், ஓ.பன்னீர்செல்வம், தினகரனுடன் இணைந்து செங்கோட்டையின் ஒன்றாக மரியாதை செலுத்தியதுடன், எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்து வதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம் என்று செய்தியாளர்களிடம் அறிவித்தனர். இந்த நிலையில், அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனை அதிமுக-வில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி மீதான அதிருப்தி […]