கரூர்: விஜய் பிரசார கூட்டத்தில் 41பேர் பலியான கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் செப். 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் உயர்நீதிமன்ற நீதிபதியின் […]