இனி இந்த 3 வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான்! யார் யார் தெரியுமா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடரை தக்கவைத்துக் கொள்ள மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு கட்டாய வெற்றி தேவைப்பட்டது. டாஸ் வென்ற சூரியகுமார் யாதவ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. சஞ்சு சாம்சன்க்கு பதிலாக ஜித்தேஷ் ஷர்மாவும், குல்தீப் யாதாவிற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும், ஹர்சித் ராணாவிற்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கும் இடம் பெற்று இருந்தனர். 

Add Zee News as a Preferred Source

ஆட்டநாயகன் விருது வென்ற அர்ஷ்தீப் சிங்

முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத அர்ஷ்தீப் சிங்க்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு பதில் ஹர்ஷித் ராணா கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடினார். ஆனால் அவரால் போதிய இன்பாக்டை கொண்டு வர முடியவில்லை. இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் இந்த தொடரில் விளையாடிய முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்களை வீழ்தி ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இதனால் இனி வரும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஹர்ஷித் ராணாவிற்கு இடம் கிடைப்பது சந்தேகமே. 

Effective  Economical

For his superb spell o

The Tes is now levelled 

Scorecards://t.co/X5xeZ0Mc5a #TeamIndia | #AUSvIND | @arshdeepsinghh pic.twitter.com/ZaJaY9T2mz

— BCCI (@BCCI) November 2, 2025

அதிரடி காட்டிய வாஷிங்டன் சுந்தர் 

கடந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மூன்று ஸ்பின்னர்களை வைத்து விளையாடியது முக்கிய காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் குல்தீப் யாதாவிற்கு பதிலாக களம் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் முதல் பந்து முதலே அதிரடி காட்ட தொடங்கினார். 23 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் உட்பட 49 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடி ஆட்டமும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

சுப்மன் கில் நீக்கப்பட வேண்டுமா?

டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா நல்ல ஒரு தொடக்கம் கொடுத்து வந்த நிலையில் ஆசிய கோப்பையில் இருந்து சஞ்சு சாம்சனுக்கு பதிலாக சுப்மன் கில் விளையாடி வருகிறார். இருப்பினும் ஒரு போட்டியில் கூட அவரால் போதிய ரன்கள் அடிக்க முடியவில்லை. இன்றைய போட்டியிலும் 12 பந்துகளில் 15 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்துள்ளார். டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில் அடுத்தடுத்த தொடர்களில் நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இன்று விளையாடிய ஜிதேஷ் சர்மா 13 பந்துகளில் 22 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இனி வரும் போட்டிகளில் சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே!

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.