ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு அதிர்ச்சியில் இருந்து மீளாத பாகிஸ்தான், காங்கிரஸ்: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

பாட்னா: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கைக்கு பிறகு பாகிஸ்​தானும் காங்​கிரஸும் இன்​ன​மும் அதிர்ச்​சி​யில் இருந்து மீள​வில்லை என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிஹார் தேர்​தலை​யொட்டி அரா, நவா​டா, பாட்னா உள்​ளிட்ட பகு​தி​களில் பிரதமர் மோடி நேற்று பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​பட்டு உள்​ளது. இந்த அறிக்கை மாநிலத்​தின் வளர்ச்​சி, உண்​மையை அடிப்​படை​யாக கொண்​டது.

காட்​டாட்சி கூட்​டணி (ஆர்​ஜேடி- காங்​கிரஸ்) சார்​பில் தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​பட்டு இருக்​கிறது. இந்த அறிக்கை பொய்​களை அடிப்​படை​யாகக் கொண்​ட​தாகும். தேர்​தல் அறிக்கை மூலம் மக்​களை முட்​டாள் ஆக்க காட்​டாட்சி கூட்​டணி முயற்சி செய்​கிறது. ஆனால் பிஹார் மக்​கள் ஏமாற தயா​ராக இல்​லை.

எங்​களது தேர்​தல் அறிக்​கை​யில் ஒரு கோடி பேருக்கு வேலை ​வாய்ப்பு உரு​வாக்​கப்​படும் என்று வாக்​குறுதி அளித்​துள்​ளோம். இந்த வாக்​குறு​தியை நிச்​சய​மாக நிறைவேற்​று​வோம். இதன்​பிறகு பிஹார் இளைஞர்​கள் வேலை தேடி வெளி மாநிலங்​களுக்கு செல்ல தேவை​யில்​லை. ஜவுளி, சுற்​றுலா, உற்​பத்தி துறை​யின் மைய​மாக பிஹார் உரு​வாக்​கப்​படும்.

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை வெற்​றிகர​மாக மேற்​கொள்​ளப்​பட்​டது. இதற்​காக முப்​படைகளுக்​கும் தலை​வணங்கி மரி​யாதை செலுத்​துகிறேன். தீவிர​வா​தி​கள் தங்​கள் வீடு​களில் பதுங்கி இருந்​தா​லும் அவர்​களை இந்​தியா வேட்​டை​யாடி அழிக்​கும். ஆபரேஷன் சிந்​தூரின்​போது பாகிஸ்​தான் மீது குண்​டுமழை பொழியப்​பட்​டது. அப்​போது காங்​கிரஸை சேர்ந்த ராஜ குடும்​பம் தூக்​கத்தை இழந்து பரித​வித்​தது. ஆபரேஷன் சிந்​தூருக்​குப் பிறகு பாகிஸ்​தான் மட்​டுமல்ல, காங்​கிரஸும் இன்​ன​மும் அதிர்ச்​சி​யில் இருந்து மீள​வில்​லை.

சீக்​கியர் படு​கொலை: கடந்த 1984-ம் ஆண்டு நவம்​பர் 1, 2 ஆகிய தேதி​களில் டெல்​லி​யில் சீக்​கியர்​கள் படு​கொலை செய்​யப்​பட்​டனர். இந்த படு​கொலையை காங்​கிரஸார் அரங்​கேற்​றினர். இதில் தொடர்​புடைய​வர்​களுக்கு காங்​கிரஸ் தலைமை இன்​றள​வும் முக்​கிய பதவி​களை அளித்து வரு​கிறது.

பிஹாரில் ஆர்​ஜேடி ஆட்​சிக் காலத்​தில் மக்​களின் நிலங்​கள் பறிக்​கப்​பட்​டன. சட்​டம், ஒழுங்கு சீர்​கெட்டு காணப்​பட்​டது. அனைத்து துறை​களி​லும் ஊழல் வியாபித்து பரவி இருந்​தது. ஆர்​ஜேடி​யின் காட்​டாட்​சியை மக்​கள் மறக்​க​வில்​லை. அந்த ஆட்சி மீண்​டும் வரு​வதை மக்​கள் விரும்​ப​வில்​லை.

காட்​டாட்​சி​யின்​போது பிஹாரில் சுமார் 40,000-க்​கும் மேற்​பட்​டோர் கடத்​தப்​பட்​டனர். பெண்​கள் வீடு​களைவிட்டு வெளியே வரு​வதற்​கு​கூட அஞ்​சினர். முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சி​யில் மாநிலத்​தின் சட்​டம் ஒழுங்கு மேம்​பட்​டிருக்​கிறது. பெண்​களின் பாது​காப்பு உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. அனைத்து துறை​களி​லும் மாநிலம் அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறது.

நாட்​டின் மிகப்​பெரிய ஊழல் குடும்​ப​மும் (ஆர்​ஜேடி) பிஹாரின் மிகப்​பெரிய ஊழல் குடும்​ப​மும் (காங்​கிரஸ்) ஒன்​றிணைந்து பிஹார் தேர்​தலில் போட்​டி​யிடு​கின்​றன. ஆர்​ஜேடி கட்​சியை சேர்ந்​தவர் முதல்​வர் வேட்​பாள​ராக நிறுத்​தப்பட காங்​கிரஸ் துளி​யும் விரும்​ப​வில்​லை. இந்த விவ​காரத்​தில் இரு கட்​சிகளிடையே தொடர்ந்து மேதல் நீடித்து வரு​கிறது. தேர்​தல் முடிவு​கள் வெளி​யான பிறகு இரு கட்​சிகளும் எதிரும் புதிரு​மாக மாறும்.

பிஹாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு இளைஞர்​கள், பெண்​கள், விவ​சா​யிகள் என அனைத்து தரப்பு மக்​களும் ஆதரவு அளித்து வரு​கின்​றனர். பிஹாரில் மீண்​டும் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைய அவர்​கள் விரும்​பு​கின்​றனர். எனவே வரும் தேர்​தலில் எங்​கள் கூட்​டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும். இவ்​​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.