உலக கோப்பையை வென்ற மகளிர் அணி: கண் கலங்கி அழுத ரோகித் சர்மா.. வைரல் வீடியோ!

நேற்று (நவம்பர் 02) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இது வரலாற்று சிறப்புமிக்க தருமணமாக மாறியது. 

Add Zee News as a Preferred Source

இப்போட்டியில் முதலில் இந்திய அணிதான் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 298 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சஃபாலி வர்மா 87 ரன்கள், தீப்தி சர்மா 58, ஸ்மிருதி மந்தனா 45 ரன்களை அடித்திருந்தனர். இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் கேப்டன் லாரா வால்வார்ட்டை தவிர்த்து வேறு எந்த வீராங்கனையுமே ரன்களை குவிக்கவில்லை. அவர் மட்டுமே 101 ரன்களை எடுத்திருந்தார். 

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by ICC (@icc)

மற்ற வீராங்கனைகளான டாஸ்மின் பிரிட்ஸ் 23, அன்னேகே போஷ் 0, சுனே லூஸ் 25, அன்னெரி டெர்க்சன் 35 ரன்கள் என அடுத்தடுத்து சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் காரணமாக அந்த அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து கோப்பையை தவறவிட்டது. மறுபக்கம் வென்ற இந்திய அணி இது வரலாற்று சாதனையாக மாறியது. இந்த நிலையில்தான் இந்திய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மைதானத்திலேயே கண் கலங்கினார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியதால், அதனை நேரில் பார்க்க ரோகித் சர்மா மைதானத்திற்கு வருகை தந்திருந்தார். இந்த சூழலில், இந்திய அணி வெற்றி பெற, அந்த தருணத்தில் கேராக்கள் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கண் கலங்கிய காட்சி பதிவானது. அவர் அந்த தருணத்தை பார்த்து ஆணந்த கண்ணீர் விட்டார். இது அவருக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததற்கு பின்னால் காரணம் உள்ளது. 

ரோகித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபில், 2024 டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வது அவரது வாழ்நாள் கனவாக இருந்தது. ஆனால் அதனை அருகில் சென்று தவறவிட்டது, அவரது மனதை மிகவும் தாக்கியதாகவே சொல்லலாம். 2023 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி வரை சென்ற நிலையில், ஆஸ்திரேலியா அணி அப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது. 

இந்த சூழலில், 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடி, அத்தொடரை வென்று தனது கனவை நினவாக்க போராடி வருகிறார். தன்னால் இதுவரை வெல்லமுடியாத, ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதை பார்த்ததும் அவரது ஆனந்தம் கண்ணீர் வழியாக வெளிப்பட்டது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.