சென்னை: சென்னைவாசிகள் தாங்கள் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. செல்லப்பிராணி நாய்களுக்கு மைக்ரோசிப்பிங் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 முதல் அதற்கான நடவடிக்கைகடிள தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கு (நாய்/பூனை) உரிமம் பெறுவது கட்டாயம் என்றும், உரிமையாளர்கள் நவ.23-க்கு முன் ஆன்லைனில் ஆண்டுக்கு ரூ.50 செலுத்தி உரிமம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம்- மாநகராட்சி அறிவிப்பு […]