சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இ நடப்பாண்டு டிசம்பர் 4ந்தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். இந்த விழாவின் உச்சக்கட்ட நிகழ்வுகள், 10-வது நாள் அதிகாலை பரணி தீபமும், […]