சென்னை: தெருநாய் தொடர்பான வழக்கில் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலாளர் உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், உச்சநீதிமன்றம், பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் நாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக கூறி உள்ளது. தெரு நாய் தொல்லை விவகாரத்தை சு உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்டு மாதம் […]