Jio vs Airtel: தினசரி 3GB டேட்டா திட்டங்கள்: சிறந்த மற்றும் மலிவானது எது?

Jio vs Airtel Recharge Plans: ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் இந்திய தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி நிறுவனங்களாக இருந்து வருகிறது. இந்த இரு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சிறந்த நன்மைகளுடன் கூடிய திட்டங்களை வழங்கி வருகின்றன. அப்படி உங்களிடம் இந்த இரண்டு சிம் கார்டுகளும் உள்ளது என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. இன்று 3 ஜிபி தினசரி டேட்டா அணுகலை வழங்கும் இரு நிறுவனங்களின் திட்டங்களைப் பற்றிய இங்கே காணப் போகிறோம். இதன் மூலம் நீங்கள் எந்த நிறுவனத்தின் திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதை முடிவு செய்துக் கொள்ள முடியும். 

Add Zee News as a Preferred Source

ஜியோ தினசரி 3 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் | Jio Daily 3GB Data Prepaid Recharge Plans
ஜியோவின் (Jio) ப்ரீபெய்ட் திட்டங்களில் மலிவான தினசரி 3 ஜிபி டேட்டா திட்டம் ரூ.449க்கு வருகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். நன்மைகளைப் பொறுத்தவரை, இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது.

இரண்டாவது திட்டத்தின் விலை ரூபாய் 1,199 மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும். நன்மைகளில் தினசரி 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இந்த திட்டம் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகிறது.

இரண்டாவது திட்டத்தின் விலை ரூபாய் 1799 மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும். நன்மைகளில் தினசரி 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தில் இலவச நெட்ஃபிக்ஸ் சந்தாவும் அடங்கும்.

ஜியோ 1,199 திட்டம்:
84 நாட்கள் செல்லுபடியாகும்
தினசரி 3 ஜிபி டேட்டா
வரம்பற்ற அழைப்பு
ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்
இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா

ஜியோ 1,799 திட்டம்:
84 நாட்கள் செல்லுபடியாகும்
தினசரி 3 ஜிபி டேட்டா
வரம்பற்ற அழைப்பு
ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்
இலவச நெட்ஃபிக்ஸ் சந்தா

ஏர்டெல் தினசரி 3 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் | Airtel Daily 3GB data Prepaid Recharge Plans
ஏர்டெல் இரண்டு திட்டங்களில் மட்டுமே தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. முதல் மலிவான திட்டத்தின் விலை ரூ.838 ஆகும். இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும். நீங்கள் தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் ஐப் பெறுவீர்கள். இந்தத் திட்டம் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே அணுகலுடன் வருகிறது, இது உங்களுக்கு 25 இலவச OTT பயன்பாடுகளை வழங்குகிறது.

இரண்டாவது திட்டத்தின் விலை ரூ.1798 ஆகும். இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் நன்மைகள் ரூ.838 திட்டத்தைப் போலவே இருக்கும், ஆனால் இதில் இலவச நெட்ஃபிக்ஸ் அடிப்படை சந்தாவை பெறுவீர்கள்.

ஏர்டெல் 838 திட்டம்:
தினசரி 3 ஜிபி டேட்டா
56 நாட்கள் செல்லுபடியாகும்
வரம்பற்ற அழைப்பு 
தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே
25 இலவச OTT பயன்பாடுகள்

ஏர்டெல் 1,798 திட்டம்:
84 நாட்கள் செல்லுபடியாகும்
வரம்பற்ற அழைப்பு 
தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்
தினசரி 3 ஜிபி டேட்டா
இலவச நெட்ஃபிக்ஸ் அடிப்படை சந்தா

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.