சென்னை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு மனிததன்மையற்ற செயல் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். கோவை விமான நிலையத்தின் பின்புறம் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிப்புக்குள்ளான அம்மாணவி, காவல்துறையினரால் […]