ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் நீண்ட காலமாக உற்பத்தியில் உள்ள புல்லட் பைக்கின் சக்திவாய்ந்த புல்லட் 650 அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு டிசம்பர் அல்லது ஜனவரி 2026ல் வெளியாக உள்ளது.
Royal Enfield புல்லட் 650 சிறப்பம்சங்கள்
ராயல் என்ஃபீல்டின் 350cc, 450cc வரிசையை கடந்து 650சிசி பிரிவில் வந்துள்ள மற்றொரு மாடலாக புல்லட் 650 ட்வீன் ஆனது மிகவும் பாரம்பரியமான ரெட்ரோ தோற்றத்தை நினைவுப்படுத்துவதுடன், சிறப்பு வாய்ந்த பாரம்பரிய ராயல் என்ஃபீல்டு லோகோ, கோல்டன் பின் ஸ்டிரிப் ஆனது பெட்ரோல் டேங்கில் உள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள கிளாசிக் 650 உட்பட மற்ற இன்ட்ர்செப்டார் 650, கான்டினென்டினல் ஜிடி 650 உள்ளிட்ட மாடல்களில் உள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
243 கிலோ கிராம் எடையுள்ள புல்லட் 650ல் 46.4bhp பவரை வெளிப்படுத்தும் 648cc பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் அதிகபட்ச டார்க் 52.3Nm ஆக வெளிப்படுத்துகின்றது. சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உடன் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
பல்வேறு இடங்களில் க்ரோம் பாகங்கள், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள எல்இடி ஹெட்லைட் கொண்டு மேற்புறத்தில் பைலட் விளக்குகள் கொடுக்கப்பட்டு, செமி அனலாக் முறையிலான டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் தற்பொழுதுள்ள புல்லட் 350 யில் இருந்து பெரும்பகுதி தழுவியதாக அமைந்துள்ளது.


இருக்கையின் உயரம் 800 மிமீ ஆக உள்ள நிலையில் சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் முறை வழங்கப்பட்டு பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் ஆனது இணைக்கப்பட்டுள்ளது.
சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தும் வகையில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டு முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் 300 மிமீ டிஸ்க் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமான புல்லட்டின் கருப்பு மற்றும் நீளம் என இரு நிறங்களை பெற்றுள்ள நிலையில், விற்பனைக்கு மோட்டோவெர்ஸ் 2025 அரங்கில் ரூ.3 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் எதிர்பார்க்கலாம்.
		


