சென்னை: தவெக தலைவர் விஜய் தலைமையில், நடைபெற்ற தவெக வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சுமார் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. அப்போது , கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு, அக்கட்சியின் […]