Roja: `பிரமாண்டமான கம்பேக்' – 12 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவுக்கு வரும் நடிகை ரோஜா!

12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு வருகிறார் நடிகை ரோஜா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வந்த ரோஜா கடைசியாக 2015-ம் ஆண்டு ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் `என் வழி தனி வழி’ படத்தில் நடித்திருந்தார்.

அப்படத்திற்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலகிய ரோஜா அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

Actress Roja
Actress Roja

2014-ம் ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை ரோஜா 2015-ம் ஆண்டிற்குப் பிறகு திரைத்துறைக்கு வரவில்லை.

2014-ம் ஆண்டைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது மீண்டும் திரைத்துறைக்குள் என்ட்ரி தந்திருக்கிறார் ரோஜா.

அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கத்தில், கங்கை அமரன், சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேஷ் நடிக்கும் `லெனின் பாண்டியன்’ படத்தின் மூலம்தான் கம்பேக் கொடுக்கிறார் ரோஜா.

இவர் இப்படத்தில் சந்தானம் என்கிற கேரக்டரில் நடிக்கிறார்.

இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. ரோஜா மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து சத்ய ஜோதி நிறுவனம், “90களின் ராணியான ரோஜாவை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு மீண்டும் வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்.

‘லெனின் பாண்டியன்’ படத்தில் சந்தானம் என்கிற கதாபாத்திரத்தில் அவரை வரவேற்கிறோம். ஐகானின் பிரமாண்டமான கம்பேக்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.