சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் சொத்துக்கள் முடக்கம்.. பின்னணி என்ன?

Suresh Raina And Shikhar Dhawan Assets Frozen: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னாவின் பெயரில் இருந்த ரூ. 6.64 கோடி மதிப்புள்ள பரஸ்பர நிதி முதலீடுகளும், ஷிகர் தவானின் ரூ. 4.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள என மொத்தம் ரூ. 11.14 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

சட்டவிரோத பந்தய தளமான 1xBet இன் நிர்வாகிகளுக்கு எதிராக பல்வேறு மாநில காவல்துறை அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட பல FIR களின் அடிப்படையில் PMLA இன் கீழ் ED விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் 1xBet மற்றும் அதன் மாற்று பிராண்டான 1xBat, 1xbat ஸ்போர்ட்டிங் நிறுவனங்கள் iந்தியா முழுவதும் சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளை இவர்கள் இருவரும் ஊக்குவிப்பதிலும் எளிதாக்குவதிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. 

சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் இருவரும்  1xBetஐ அதன் மாற்று  நிறுவனங்கள் மூலம் விளம்பரப்படுத்துவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பதங்களை செய்திருப்பது தெரியவந்தது. மேலும், 1xBet இந்தியாவில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கியதும், ஆன்லைன் வீடியோக்கள் மூலம் இந்திய பயனர்களை டார்கெட் செய்ய மாற்று பிராண்டிங் மற்றும் விளம்பரங்களை பயன்படுத்தியதும் தெரியவந்தது. 

1xbet பல்வேறு Mule accounts வைத்திருக்கிறது. அதாவது ட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தை நகர்த்த அல்லது மோசடி செய்யப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்காகும். கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்ட Mule accounts பண இருப்புக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை சுமார் ரூ. 1000 கோடிக்கு மேல் நிதி மோசடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த மோசடி வங்கி கணக்குகளில் சிலவற்றையை முடக்கி உள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் பிரபல முன்னாள் இந்திய அணி வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவன் சம்பந்தப்பட்டிருப்பது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.