வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வீர, தீர செயல்​களுக்​கான ‘அண்ணா பதக்​கம்’ ஒவ்​வொரு ஆண்​டும் குடியரசு தின விழா​வின்​போது முதல்​வ​ரால் வழங்​கப்​படு​கிறது. பொது​மக்​களில் மூவருக்​கும், அரசு ஊழியர்​களில் மூவருக்​கும் (சீருடைப் பணி​யாளர்​கள் உட்​பட) இந்த பதக்​கங்​கள் வழங்​கப்​படும். விண்​ணப்​ப​தா​ரர் தமிழகத்தை சேர்ந்​தவர்​களாக இருக்க வேண்​டியது அவசி​யம். வயது வரம்பு கிடை​யாது.

அந்​தவகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான ‘வீர தீர செயல்​களுக்​கான அண்ணா பதக்​கம்’ விருதுக்கு பரிந்​துரைகள் வரவேற்​கப்​படு​கின்​றன. இதற்​கான விண்​ணப்​பம் மற்​றும் பரிந்​துரைகள் https://awards.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் மட்​டுமே பெறப்​படும். இந்த இணை​யதளத்​தில் அதற்​கென உள்ள படிவத்​தில் குறிப்​பிடப்​பட்​டுள்ள விவரங்​களை உள்​ளடக்​கிய​தாக​வும், விருதுக்​காக பரிந்​துரைக்​கப்​படும் நபர்​களின் வீர தீர செயல்​களைப் பற்றி எடுத்​துரைக்​கும் தகு​தி​யுரை (அதி​கபட்​சம் 800 வார்த்​தைகளுக்கு மிகாமல்) தெளி​வாக​வும், தேவை​யான அனைத்து விவரங்​களும் குறிப்​பிடப்பட வேண்​டும். விருதுக்கு விண்​ணப்​பிக்க கடைசி நாள் டிசம்​பர் 15-ம் தேதி ஆகும்.

இணை​யதளத்​தில் பெறப்​படும் விண்​ணப்​பங்​கள் மற்​றும் பரிந்​துரைகள் மட்​டுமே பரிசீலிக்​கப்​படும். தகு​தி​யுடையோர் அரசால் நியமிக்​கப்​படும் தேர்​வுக் குழு​வால் தேர்வு செய்​யப்​படு​வர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.