Kaantha: “8 மாசம் பாதி மீசையோடவே சுத்திட்டு இருந்தேன்!" – பகிரும் சமுத்திரக்கனி

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `காந்தா’ திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

Kaantha Movie
Kaantha Movie

துல்கர் சல்மான், ரானா, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போஸ் எனப் பலரும் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியானது.

சென்னையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.

மேடையில் சமுத்திரக்கனி பேசும்போது, “என்னுடைய பயணத்தை காந்தா-வுக்கு முன், காந்தா-வுக்குப் பின் என மாற்றலாம்.

இதே சத்யம் தியேட்டர்ல `சுப்ரமணியபுரம்’ படத்தோட டிரெய்லர் ரிலீஸ் ஆகும்போது காய்ச்சல் வர்ற மாதிரியான உணர்வு இருந்தது. அதே உணர்வு எனக்கு இப்போ இந்தப் படத்துக்கு இருக்கு.

இந்த மாதிரியான படைப்பு காலத்துக்கும் அழியாமல் இருக்கும். இதில் நடித்தது எனக்கு பெருமை. சில கதைகள்தான் நம்மை சாப்பிட விடாது, தூங்கவிடாது.

Kaantha - Samuthirakani
Kaantha – Samuthirakani

நான் கதையைப் படிச்சதுக்குப் பிறகு சாப்பிடாமல், தூங்காமல் இருந்தேன். இந்தப் படத்துக்காக நான் ஒரு 8 மாசம் பாதி மீசையோடவே சுத்திட்டு இருந்தேன்.

எங்கப் போனாலும் போட்டோ எடுத்துறாதீங்கனு கை வச்சு மறைச்சு சுத்திட்டு இருந்தேன். இந்தப் படத்துல துல்கர் சாரை பார்த்து என்ன நடிப்பு சக்ரவர்த்தி’னு சொல்லுவேன்.

நடிப்பு சக்ரவர்த்திங்கிற வார்த்தையில ஒவ்வொரு எழுத்துக்கும் அவ்வளவு தகுதியானவர் அவர். நல்ல சினிமா இருக்கும் இடங்களில் ரானா இருப்பாரு.” எனப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.