“நாயகன் படத்தை நான் 16 முறை பார்த்திருக்கிறேன்; ரீ-ரிலீஸுக்கு தடையில்லை'' – உயர்நீதிமன்ற நீதிபதி

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு முன்னோடி, 1987ல் வெளியான ‘நாயகன்’ படம் தான். மணிரத்னம்-கமல், பி.சி.ஶ்ரீராம் கூட்டாண்மையில் மூன்று தேசிய விருதுகளை வென்ற படம். வேலு நாயக்கர் கதாபாத்திரமாகவே கமல் வாழ்ந்திருப்பார். இளையராஜாவின் 400வது படம் என்ற சிறப்பும் ‘நாயகனுக்கு’ உண்டு.

இப்படி பல சிறப்புகளைப் பெற்ற ‘நாயகன்’, கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

'நாயகன்' படப்பிடிப்பில்..
‘நாயகன்’ படப்பிடிப்பில்..

இந்நிலையில், ‘நாயகன்’ திரைப்படத்தை எனது நிறுவனம், ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து படம் வெளியிடும் உரிமையை கடந்த 2023 ஆம் ஆண்டு பெற்றுவிட்டோம்.

இதை மறைத்து வி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ‘நாயகன்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இது முறைகேடான நடவடிக்கை. எனவே ‘நாயகன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று எஸ்.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி செந்தில் குமார் முன்பு மனுதாரர் தரப்பு முறையீடு செய்திருந்தார். அதன்படி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், ‘நாயகன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை விதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தார்.

கமலின் நாயகன் படம் குறித்து பேசிய  நீதிபதி செந்தில் குமார்
நீதிபதி செந்தில் குமார்

இதற்குமுன்பு பேசியவர், “இந்த படத்தை நான் 16 முறை பார்த்திருக்கிறேன். இதன் காட்சிகளை என்னால் இப்போதும் விவரிக்க முடியும். எனவே ‘நாயகன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை விதிக்க முடியாது” என்று கூறியது கமல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.