வாஷிங்டன்,
அமெரிக்காவில் புளோரிடா தம்பா நகரில் உள்ள நெடுஞ்சாலை நேற்று அதிகாலை சட்டவிரோதமாக கார் பந்தயம் நடைபெற்றது.
இதையறிந்த போலீசார், கார் பந்தயத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். அப்போது, பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் காரை வேகமாக இயக்கியுள்ளனர்.
இதையடுத்து, பந்தயத்தில் ஈடுபட்டவர்களை போலீசாரும் காரில் துரத்தியுள்ளனர். அப்போது, 22 வயது இளைஞர் ஓட்டிய பந்தய கார், தம்பா நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கேளிக்கை விடுதியில் நின்றுகொண்டிருந்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.
விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.