டோக்கியோ,
வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 12.53 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 39.64 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 143.51 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இருந்து சுமார் 556 கி.மி. தொலைவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்று ஜப்பானில் ரிக்டர் 6.8 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.