சென்னை: வரும் (நவம்பர்) 15ந்தேதி அன்று பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டும் பணியில் தங்களது ஆதரவாளர்கள் மூலம் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில் பாமகவின் சின்னம் உள்பட கட்சி தலைவர் பதவியை அன்புமணி பெற்றுள்ளார். இதை எதிர்த்து ராமதாஸ் தேர்தல் […]