Ind vs Sa 1st Test Match: இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது ஆட்டத்தில் காயம் அடைந்தார். இதன் காரணமாக கடைசி போட்டியில் விளையாடாமல் காயத்தால் வெளியேறினார். இந்த சூழலில், அவர் தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
Rishabh Pant: மாபெரும் சாதனையை படைக்க இருக்கும் பண்ட்
இந்த தொடர் நாளை நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூலம் தொடங்குகிறது. இந்த நிலையில், இதில் விளையாடவிருக்கும் ரிஷப் பண்ட், இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கின் டெஸ்ட் போட்டிகளில் அடித்த அதிக சிக்ஸர் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.
Rishabh Pant: வெறும் 47 போட்டிகளில் 90 சிக்சர்கள்
சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் 90 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஆனால் 47 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடிய ரிஷப் பண்ட் தற்போது 90 சிக்ஸர்களுடன் அவரின் சதனையை சமநிலையில் வைத்திருக்கிறார். இதில் மேலும் ஒரு சிக்ஸர் அடித்தால், அவர் இந்திய அணிக்கான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த திறமைமிக்க வீரராக சாதனை பதிவு செய்வார்.
Rishabh Pant: சேவாக் சாதனையை முறியடிக்க காத்திருப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்றும் சிறந்த வீரர்தான் என நிருபித்த ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை தவறவிட்டார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் விளையாடுவதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலும், ரிஷப் பண்ட் இன்னும் பல ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதன் மூலம் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
R Balaji