ஆணவக் கொலைகளை தடுக்க பரிந்துரை வழங்க நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அரசாணை

சென்னை: ஆணவப் படு​கொலைகளை தடுப்​ப​தற்​கான பரிந்​துரைகளை வழங்க முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் ஆணை​யத்தை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகத்​தில் ஆணவக் கொலைகளை தடுப்​ப​தற்​கான பரிந்​துரைகளை வழங்க, உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் சட்ட வல்​லுநர்​கள், முற்​போக்கு சிந்​தனை​யாளர்​கள், மானுட​வியல் அறிஞர்​களைக் கொண்ட ஆணை​யம் அமைக்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் கடந்த அக். 17-ம் தேதி அறி​வித்​தார்.

அதை செயல்​படுத்​தும் வித​மாக, தற்​போது ஆணை​யம் அமைக்​கப்​பட்டு தமிழக அரசால் அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இந்த ஆணை​யத்​தின் தலை​வ​ராக முன்​னாள் நீதிபதி கே.என்​. ​பாஷா இருப்​பார். ஆணைய உறுப்​பினர்​களாக, ஓய்​வு​பெற்ற அலு​வலர்​கள் வி.பழனிகு​மார் (ஐஏஎஸ்), எஸ்​.​ராம​நாதன் (ஐபிஎஸ்) நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அரசி​யல் கட்​சிகள், சட்டவல்​லுநர்​கள், சமூக ஆர்​வலர்​கள் மற்​றும் பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் கருத்​துகளை கேட்​டறிவதுடன், அதன் சமூகக் காரணி​களை​யும் ஆராய்ந்​து, புதிய சட்​டங்​களை இயற்​று​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகளை இந்த குழு​வினர் பரிந்​துரைக்க வேண்​டும்.

எதிர்​காலத்​தில் இத்​தகைய நிகழ்​வு​களை தடுக்க விழிப்​புணர்வு ஏற்​படுத்​து​வதற்​கான செயல் திட்​டத்​தை​யும் வகுக்க வேண்​டும். மேலும், இந்த ஆணை​யம் தனது ஆய்​வு​களை நிறைவு செய்​து, 3 மாதங்​களுக்​குள் அரசுக்கு விரி​வான அறிக்​கையை சமர்ப்​பிக்க வேண்​டும் என்று அந்த அரசாணை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.