சென்னை: பேரரசா் பெரும் பிடுகு முத்தரையருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகள் மாநில முதல்வரால் வைக்கப்படும் நிலையில், இந்த கோரிக்கை தமிழக அமைச்சரால் விடுக்கப்பட்டுள்ளது. பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் நினைவாக அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், […]